என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்

என் இயேசு ராஜா ஸ்தோத்திரம் (2)
ஸ்தோத்திரமே (2) உயிருள்ள நாளெல்லாமே

1. துதிகன மகிமையெல்லாம்
உமக்கே செலுத்துகிறோம்
மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்தி
ஆராதனை செய்கிறோம்

2. இரக்கம் உள்ளவரே
மனதுருக்கம் உடையவரே
நீடிய சாந்தம், கிருபை அன்பு
நிறைந்து வாழ்பவரே

3. கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரே
உண்மையாய் கூப்பிடும்
குரல்தனைக் கேட்டு
விடுதலை தருபவரே

4. உலகத் தோற்ற முதல்
எனக்காய் அடிக்கப்பட்டீர்
துரோகியாய் வாழ்ந்த என்னையே மீட்டு
புதுவாழ்வு தந்தவரே

Start Downloading Your Apps