ஐயா கொல்கொதா மலை

ஐயா கொல்கொதா மலை நாதா
எனக்கார் துணை சொல்லனுகூலா

அனுபல்லவி

மெய்யா இது தருணம் வா வா
இச்சிறியோன் முகத்தைப் பார்க்க வாவா

சரணங்கள்

1. பாறைக்குள் தேரை போலானேன் நான்
பல துயர் பட்டவனானேன்
ஆலைக்குள் கரும்பு போலானேன் இந்த
அகதிக் குன் முகம் காட்ட வாரும்- ஐயா

2. பலரும் பலது சொல்லி ஏய்த்து என்னை
அலைவாய்த் துரும்பு போல் ஆய்ந்து எனைத்
தொலையாத கவலைக்குள் மாய்த்து எனைத்
துரத்திவிட்ட கதியைப் பார்த்து- ஐயா

3. பெற்றோர் எனைக் கைவிட்டபோதும் என்
பிறவிகள் மறந்திட்ட போதும்
மற்றோர்கள் இரங்காத போதும் என்னை
மறவா என் நேசா நீர் பாரும்- ஐயா

4. தாகம் மிகுந்தவரே வாரும் நல்
அமர்ந்த தண்ணீரண்டை சேரும்
பணமும் விலையுமில்லாமல் நான்
பருகிடத் தாகத்தைத் தீரும்- ஐயா

5. தூங்கா இஸ்ரவேலின் தேவா ஏழை
துயர் நீக்கும் மகிமை யெகோவா
மங்காத வாக்குரைத்த தேவா உனை
மறக்கவே மாட்டேன் என் தேவா- ஐயா

Start Downloading Your Apps