குயவனே குயவனே

குயவனே குயவனே
படைப்பின் காரணனே
களி மண்ணான என்னையுமே
கண் நோக்கி பார்த்திடுமேன்

1. வெறுமையான பாத்திரம் நான்
வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய்
விளங்கச் செய்யுமே

2. வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம்
இயேசுவை போற்றிடுதே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே

Start Downloading Your Apps