சுத்த இருதயத்தை நீர்

1. சுத்த இருதயத்தை நீர்,
கர்த்தாவே, என்னில் சிஷ்டியும்,
திட ஆவியை, தேவரீர்,
என் உள்ளத்தில் புதுப்பியும்.

2. ஆ, உம்முடைய முகத்தை
விட்டென்னை நீர் தள்ளாமலும்,
என்னிடத்தில் தெய்வாவியை
பேர்த்தெடுக்காமலுமிரும்.

3. மீண்டும் உமதிரட்சிப்பின்
சந்தோஷத்தைத் தந்தருளும்;
இனிப் புதிய ஆவியின்
உற்சாகம் என்னைத் தாங்கவும்.

Start Downloading Your Apps