நல்வழி மெய்‌ ஜீவன்‌ எனும்‌

நல்வழி, மெய்‌, ஜீவன்‌ எனும்‌ நாம தேயனே,-உனை
நம்பினேன்‌, ஏழைக்கிரங்கி ஆள்‌, என்‌ நாயனே.

செல்வழி விலகு தீயர்‌ ஜீவனில்‌ சேர-நர
ஜென்மமாம்‌ மரித்துயிர்த்தாரே, வினைதீர;
திருமறை வேதா, அருள்‌ நிறை போதா,
கருணை மெய்த்‌ தாதா, உரிமையுள்ளெம்‌ யேசுநாதா! - நல்‌

சரணங்கள்‌

1. சத்தியத்தையே போதிக்கும்‌ சத்தியம்‌ நீயே;-அந்த
சத்தியத்தில்‌ நான்‌ நடக்கச்‌ சக்தி ஈவாயே;
சுத்தமறையாம்‌ சுவிசே ஷத்தை ஈந்தாயே;-அதின்‌
சுத்தாங்க மெய்ம்மை உணர்த்து வித்தருள்வாயே;
தொழுதகம்‌ நேர்ந்தேன்‌, அழுதகம்‌ ஓர்ந்தேன்‌,
எளியனுள்‌ சோர்ந்தேன்‌, முழுதுமே சார்ந்தேன்‌ உனதடி - நல்‌

2. செத்த பிரேதம்போல்‌ செயல்‌ அற்றவன்‌ நானே-நல்ல
ஜீவனைக்‌ கொடுக்கும்‌ நித்ய ஜீவன்‌ நீ தானே;
முத்தி நெறி காட்டும்‌ மார்க்கம்‌, சுத்த நல்‌ தேனே,-அதின்‌
மூலம்‌ நான்‌ உயிர்க்க உனதாவி ஈ, கோனே;
முடவியல்‌ மாற, நடையது தேற,
அடமது மாற, திடமனதாய்க்‌ கரையேற. - நல்‌

- ஜாண்‌ பால்மர்‌

Start Downloading Your Apps