நெஞ்சமே, கெத்சமேனக்கு

1. நெஞ்சமே, கெத்சமேனக்கு
நீ நடந்து வந்திடாயோ?
சஞ்சலத்தால் நெஞ்சுருகி
தயங்குகின்றார் ஆண்டவனார்

2. ஆத்துமத்தில் வாதை மிஞ்சி
அங்கலாய்த்து வாடுகின்றார்
தேற்றுவார் இங்காருமின்றி
தியங்குகின்றார் ஆண்டவனார்.

3. தேவ கோபத் தீச்சூளையில்
சிந்தை நொந்து வெந்துருகி
ஆவலாய்த் தரையில் வீழ்ந்து
அழுது ஜெபம் செய்கின்றாரே.

4. அப்பா பிதாவே இப்பாத்ரம்
அகலச் செய்யும் சித்தமானால்
எப்படியும் நின் சித்தம்போல்
எனக்காகட்டும் என்கின்றாரே

5. ரத்த வேர்வையாலே தேகம்
மெத்த நனைந்திருக்குதே
குற்றமொன்றும் செய்திடாத
கொற்றவர்க் கிவ்வாதையேனோ?

6. இந்த ஆத்ம வாதையெல்லாம்
எந்தன் பாவத்தால் வந்ததே
சுந்தரம் சேர் யேசுவே என்
தோஷம் பொருத்தாளுமையா

Start Downloading Your Apps