பாவத்தின் பாரத்தினால் தவித்திடும்

1. பாவத்தின் பாரத்தினால் தவித்திடும் பாவி என்னை
நின் கிருபை பிரவாகத்தால் ஏற்றிடும் இயேசுநாதா

2. கெட்ட குமாரனைப் போல் துஷ்டன் நான் அலைந்தேனப்பா
நின் அன்பை உணராமல் துரோகம் நான் செய்தேனே

3. தந்தையை விட்ட பின்பு தவிடுதான் ஆகாரமோ
மனங்கசிந்து நொந்தேன் கண்ணீரைத் துடைத்திடுமே

4. கள்ளானாயினும் நான் நீ பெற்ற பிள்ளையல்லோ
கள்ளனுக்கருள் செய்த நீ தள்ளாதே சிலுவை நாதா

5. தாய் தந்தை தமரெல்லாம் என்னைக் கைவிடுவார்கள்
சாகும் நாளென்னைத் தாங்குவார் நீரல்லால் யாருமில்லை

Start Downloading Your Apps