இயேசு நான்‌ நிற்கும்‌ கன்மலையே

இயேசு நான்‌ நிற்குங்‌ கன்மலையே!-மற்ற
எந்த ஆதாரமும்‌ வெறும்‌ மணல்‌ தரையே.

1. இயேசுவின்‌ நாமத்தின்‌ மேலே-என்றன்‌
எல்லா நம்பிக்கையும்‌ வைத்தேன்‌ அன்பாலே;
நேசனையுங்‌ கூட நம்பேன்‌,-நான்‌
இயேசு நாமத்தின்‌ மேல்‌ முழுதுமே சார்வேன்‌. - இயேசு

2. இருள்‌ அவர்‌ அருள்‌ முகம்‌ மறைக்க,-நான்‌
உறுதியாய்‌ அவர்‌ மாறாக்‌ கிருபையில்‌ நிலைப்பேன்‌;
உரமாகக்‌ கடும்புயல்‌ வீச,-சற்றும்‌
உலையாத எனது நங்கூரமாம்‌ அவரே. - இயேசு

3. பெரு வெள்ளம்‌, பிரவாகம்‌ வரினும்‌-அவர்‌
பிரிதிக்னை, ஆணை, இரத்தம்‌ என்‌ காவல்‌;
இருதயத்தின்‌ நிலை அசைய-அப்போ
தேசுவே என்‌ முழு நம்பிக்கையாமே. - இயேசு

4. சோதியாய்‌ அவர்‌ வரும்போது-நான்‌
சுத்தனாய்த்‌ தரிசித்தே அவரைப்‌ போலாவேன்‌;
நீதியாம்‌ ஆடை தரிப்பேன்‌,-சதா
நித்திய காலமாய்‌ ஆளுகை செய்வேன்‌. - இயேசு

- அருள்திரு. வே. சந்தியாகு

Start Downloading Your Apps