ரோஜாப்பூ வாச மலர்

ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)

மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி
நல் மணமக்கள் மீது நாம்
எல்லா மலரும் தூவிடுவோம்

ரோஜாப்பூ வாச மலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)

மன்னனாம் ........................ மணமகளோடு
அன்றிலும் பேடும் போல் ஒன்றித்து வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க நம்
வேண்டுதலோடு தூவிடுவோம்

மணமகள் ..................... இணைபிரியாது
மணமகன் மீது மிக அன்பு கூர்ந்து
மனைவிக் கழகு தருங்குணம் யாவும்
பெற்றி இலங்கிடத் துவிடுவோம்

புத்திர பாக்கியம் புகழும் நல்வாழ்வும்
சத்தியம் சாந்தம் சுத்தநல் இதயம்
நித்திய ஜீவனும் பெற்றிவர் என்றும்
பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம்

கறை திறையற்ற மணவாட்டி சபையை
இறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும்
மங்கள நாளை எண்ணியே இப்போ
நேசமணாளன் மேல் தூவிடுவோம்

Start Downloading Your Apps