ஜெயம் ஜெயம் அல்லேலூயா

ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் எப்போதும்
யேசுநாதர் நாமத்திற்கு ஜெயம் ஜெயம் எப்போதும்.

1உம்மைப் பின்செல்வேன் என் சுவாமி எனக்காக நீர் மரித்தீர்
எல்லாரும் ஓடினாலும் உமதன்பால் நானிருப்பேன்.

2பாவி பாவி பாவி பாவி பரலோகம் சேரவா
பிராணநாதர் பாதத்தண்டை தாவியே ஓடிவா.

3பாவ சஞ்சலத்தை விட நாளை வரக் காணாதே
ரட்சகரே அழைக்கிறார் பாவியே ஓடிவா.

4நானே வழி சத்தியம் நானே ஜீவன் என்றாரே
நாதன் கிறிஸ்துவண்டை பாவியே ஓடி வா.

Start Downloading Your Apps