எங்கே ஓடுவேன்

1. எங்கே ஓடுவேன்?
பாதகன் ஆனேன்;
தீமை எங்கும் என்னை மூடும்,
ஆதரிக்க ஆரால் கூடும்?
எங்கே ஓடுவேன்?
பாதகன் ஆனேன்.

2. யேசு ஸ்வாமி, நீர்
என்னைக் கூப்பிட்டீர்
ஆதலால் உம்மண்டை வந்து
அன்புடன் உம்மைப் பணிந்து
நிற்கிறேன்; ஆ! நீர்
என்னைக் கூப்பிட்டீர்.

3. பாவத்தால் உண்டாம்
துன்பமே எல்லாம்
உம்மால் தீர நீர் மரித்தீர்,
மாசில்லாத ரத்தம் விட்டீர்
இவ்விதமாய் நீர்
என்னை ரட்சித்தீர்.

4. குற்றம் தீயது;
அதிலும் அது
நீர் அடைந்த சாவினாலே
நீங்கிப் போயிற்றாதலாலே
ஏழைப் பாவியேன்
நீதிமானானேன்.

Start Downloading Your Apps