ஓ இயேசுவே பாரில்

ஓ இயேசுவே! பாரில் உந்தன் ஆட்சி வருகவே
நின் உலகிலே வாழ்வு நிறையும் மாட்சி நிறைந்ததே

அன்புறவு சமாதானம். நீதியுடன் முழு நிறைவும்
ஆண்டவனின் மாட்சிமிக்க ஆட்சியதன் அடையாளம்
ஆன்ற அதன் அமைப்புக்களும் என்றென்றும் புதியவைகள்
ஆதி வாழ்க்கை மறைந்திடுமேஜோதியாக மலர்ந்திடுமே

ஆட்சியதன் மாதிரியே அர்ப்பணமாம் வாழ்க்கையதே
மாட்சியான சிலுவையே ஆட்சியதன் வல்லமையே
காட்சியாக சிலுவையிலே இயேசு நாதர் மகிமைபெற்றார்
சாட்சியாக மகிமையினை அவர் போலவேஅடைந்திடுவோம்

பழமைவாத பெருமைகளால் விளைந்திருக்கும் பிரிவினைகள்
கலைந்துவிட இறைவனாட்சி வந்து எமைஒன்றாக்க
கர்த்தனவர் வருகைக்காக காத்திருந்த இஸ்ரவேல் போல் 
காத்திருந்து இறைவனவர் ஆளுகையை அறிந்திடுவோம்

நான்கு சுவர் மட்டிலுமேஎட்டிடும் நம் இறை பணியும் 
நலிந்திடாமல் எட்டுதிக்கும் உடைந்து எங்கும் ஒளி தரவும் 
நில உலகில் இறையாட்சியால் புத்தியிரே பெற்றிடவும் 
நிறைவுடனே பணியும் செய்வோம் மாதிரியை மாற்றிடுவோம்.

Start Downloading Your Apps