மேசியா ஏசு நாயனார்‌ எமை

மேசியா ஏசு நாயனார்‌, - எமை
மீட்கவே நரனாயினார்‌.

சரணங்கள்‌

1. நேசமாய்‌ இந்தக்‌ காசினியோரின்‌
நிந்தை அனைத்தும்‌ போக்கவே,
மாசிலான்‌ ஒரு நீசனாகவே
வந்தார்‌ எம்‌ கதி நோக்கவே. - மேசியா

2. தந்தையின்‌ சுதன்‌ மாந்தர்‌ பாதகம்‌
சகலமும்‌ அற வேண்டியே,
விந்தையாய்க்‌ குடில்‌ மீது வந்தனர்‌
விண்ணுலகமும்‌ தாண்டியே. - மேசியா

3. தொண்டர்‌ வாழவும்‌, அண்டரின்‌ குழாம்‌
தோத்திரம்‌ மிகப்‌ பாடவும்‌,
அண்டு! பாவிகள்‌ விண்ணடையவும்‌
ஆயர்‌ தேடிக்‌ கொண்டாடவும்‌. - மேசியா

4. தேவனாம்‌ நித்ய ஜீவனாம்‌ ஒரே
திருச்சுதன்‌ மனுவேலனார்‌
பாவிகள்‌ எங்கள்‌ பாவம்‌ மாறவே
பார்த்திபன்‌ தேவ பாலனாய்‌. - மேசியா

- ச. யோசேப்பு

Start Downloading Your Apps