ஜீவனேசு கிருபாசன்னா எனின்

ஜீவனேசு கிருபாசன்னா, எனின்‌
சிறுமை தீர்த்தருள்‌ ஓசன்னா!

சரணங்கள்‌

1. காவில்‌ ஆதஞ்‌ செய்‌ பாவமூடவே,
கடிய பேய்‌ நரகோடவே,
பூவுள்ளோருமைப்‌ பாடவே, பரி
பூரண க்ருபை நீடவே. - ஜீவ

2. தொண்டர்‌ பாதக ரண்டகங்‌ கெட,
துயரமேபடும்‌ அத்தனே,
தொண்டன்‌ நின்‌ சரணண்டினேன்‌; எனின்‌
நோயைத்‌ தீர்‌, பரிசுத்தனே! - ஜீவ

3. அடியர்‌ அடி பெற, அலகை அழல்‌ விழ,
அரிய பொன்முடி கொடுபட,
படியில்‌ நான்‌ படுங்‌ கொடிய விடர்‌ கெட,
பலது தீமையு முறிபட. - ஜீவ

- தேவசிகாமணி சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps