இன்பக் கானானுக்குள் ஏழை

1. இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல
இயேசுவின் மார்பில் நான் ஆனந்திப்பேன்

2. பரம சுகங்களின் இனிய ரசம்
பரமேசனோடு யான் பானம் செய்வேன்

3. பரமபிதா வெந்தன் கண்ணினின்று
அழுகையின் கண்ணீரைத் துடைத்திடுவார்

4. சத்துரு சேனைகள் அங்கேயில்லை
இயேசுவின் புத்திரர் மாத்திரமே

5. தேவாட்டுக்குட்டியின் திரு மனைவி
சிறப்புடனிலங்கிடும் தேசமது

6. கேரூபின் சேராபின் பாடிடவே
மூப்பரும் சாஷ்டாங்கம் பணிகிறாரே

Start Downloading Your Apps