உம் சித்தம் இயேசுவே

உம் சித்தம் இயேசுவே நானோர் மண்பாண்டமே
உத்தம ஜீவியாய் உயர்த்த வேண்டுமே

அனுபல்லவி

நித்தம் என் பந்தயம் சத்திய சிலுவையே
சித்தம் அறிந்து யான் செய்திட வேண்டுமே

சரணங்கள்

1. அலகையின் ஆஸ்தியும் உலகின் சம்பாத்தியமும்
ஓர் நாளில் தூசியாய் ஒழிந்து போய்விடும்
அந்தர வானமும் அகில பூமியும்
வெந்த உருகிப்போம் நீர் வாரும் நாளிலே - உம்

2. உற்றாரும் மற்றாரும் உறவினர் யாவரும்
மருளவைத் தெந்தனை வெருள விரட்டினும்
அருளே என் தாபரம் ஆண்டவரின் கரம்
அணைத்து எடுத்துத் தம் அண்டையில் சேர்க்குமே - உம்

3. உயர்வான கல்வியும் உத்தியோகப் பட்டமும்
உலகத்தின் ஞானமும் என்னோடு சேருமோ
மரணத்தின் கூடவே மறைந்தே போகுமே
என்னோடு சேர்வதென பாவமும் புண்ணியமே - உம்

4. பெலவீன பாவி நான் சுகவீன தேகி நான்
உலகத்தின் மாய்கையில் அலைந்தழியாமல் நான்
உலக முடிவிலே உம்மை நான் சந்திக்க
என்னை நடத்தும் என் இயேசு நாதா- உம்

Start Downloading Your Apps