யுத்தம் ஒன்று வருதே

யுத்தம் ஒன்று வருதே, தேவ சேனை புறப்படு
சத்துரு முன்னே வருகின்றான் இன்றே அவனை ஒழித்திடு

1. இயேசுவை நீ பற்றிக்கொள்
உறுதியாகப் பிடித்துக்கொள்
தீங்கு நாளும் நெருங்கி வருதே
வல்ல ஆவி உன்னைத் தாங்குவார்
தங்கி உன்னைத் தாங்குவார்
துடிக்கும் இரத்தத்தோடு எழுந்து வா

2. பயப்படாதே மகனே
நான் உனக்குக் துணையல்லோ
ஒருவனும் உன்னை அசைப்பதில்லையே
நான் உனக்கு கேடகம்
மகா பெரிய பெலனாம்
ஆவியின் பட்டயம் எடுத்து வா

3. மாம்சத்தோடும் இரத்தத்தோடும்
ஒழிவதில்லை நம்யுத்தம்
தொடரும் வாழ்வின் கடைசி நாள் மட்டும்
இரத்தம் சிந்த நேரிட்டாலும்
அஞ்சா நெஞ்சர் இயேசுவின் பின்னே
துணிச்சலோடு பயணம் வைத்து வா

Start Downloading Your Apps