வா எங்கள் சுவாமி வா

வா எங்கள் சுவாமி வா இந்த நேரத்தில்
வந்து நின் சுந்தரக்கையால் தந்திடும் நன்மையெல்லாம்

1. இராப்பகலெங்களைக் காரும் போக்குவரத்திலெல்லாம்
கூப்பிடும் போதெல்லாம் கேட்டுக் கொண்டணைத்தன்பு செய்வாய்

2. உன்னடியாரெங்கள் வம்சம் உம்மை அடைந்திடவே
உச்சித ரட்சண்ய வேலை ஊக்கமாய்ச் செய்திடவே

3. கல்வாரி ராயரின் புண்யம் கன்மிகள் எங்களுக்கே
அல்லேலூயா சொல்லும் நாங்கள் ஐயனின் பொன்னடிக்கே

4. ஏசையனும் மையல்லாமல் எங்களுக்காருமில்லை
நீசரென்றெம்மை விடாதே நின்னடி தஞ்சமையா

5. வந்தனம் வந்தனம் ராஜா சந்ததம் எங்களைக் கார்
வல்லபம் தந்திட கட்டி வானகரின் வழி சேர்

Start Downloading Your Apps