வானோர்‌ பூவோர்‌ கொண்டாட

வானோர்‌ பூவோர்‌ கொண்டாட
மனுவேலுயிரோ டெழுந்தார்‌ ஜெயமே.

தீயதயாளன்‌ திருமறைநூலன்‌,
திரிபுவனங்களாள்‌ செங்கோலன்‌,
ஞானசு சீலன்‌ நரரனுகூலன்‌,
நடுவிடவே வருபூபாலன்‌ - வானோர்‌

சரணங்கள்‌

1. அலகையை' ஜெயித்தார்‌, அருள்மறை முடித்தார்‌,
அருமலர்க்கா காவலை மொழிந்தார்‌;
நிலைதிரை கிழித்தார்‌, தடைச்சுவரித்தார்‌,
நேராய்த்‌ தரிசனந்தர விடுத்தார்‌. - வானோர்‌

2. செத்தோ ருயிர்த்தார்‌, திருநகர்‌ பூத்தார்‌,
தேடற்‌ கரியதோர்‌ காட்சிவைத்தார்‌,
மற்றோர்‌ பார்த்தார்‌, மலைவுகள்‌ தீர்த்தார்‌,
மரித்தார்‌ முதற்பலனாய்ச்‌ செழித்தார்‌. - வானோர்‌

3. அடியவர்‌ கண்டார்‌, ஆர்துயர்‌ விண்டார்‌,
அருமறைக்‌ கருத்தாய்ந்தே நின்றார்‌,
மடமையகன்றார்‌, மயக்கமே கொன்றார்‌,
வானானந்தமே மனங்கொண்டார்‌. - வானோர்‌

4. மகதலானாளு மதி சூசன்னாளும்‌,
மயங்கியெழுதயோ வன்னாளும்‌,
மகவிருவர்‌ தருசா லொமித்தாயும்‌
மரை மலரடிதொழு தேத்தினரே. - வானோர்‌

5. எம்மாவூர்‌ சீடரி ருவர்க்குந்‌ தோமா
இலதுபதின்‌ மருக்குமே காட்சி
நன்‌ மனதுடனே பதினொருவருக்கும்‌
நடுவகத்தே வருமாகசூட்சி - வானோர்‌

6. மகதலனாட்கு மற்ற மங்கையர்க்கும்‌
மகத்துவத்தே தரிசன மளித்தார்‌;
பேதுரு தனித்தும்‌ யாக்கோபு தனித்தும்‌
பிரத்தியேகத்தில்‌ தரிசித்தனரே. - வானோர்‌

7. கலிலே யாக்கடலில்‌ எழுவரும்‌ பார்த்தார்‌;
காட்சி மலையஞ்‌ தூறுபேர்‌ பார்த்தார்‌;
உலை எருசலமில்‌ சீடரைச்‌ சேர்த்தார்‌;
ஒலிவ மலைமேல்‌ திரள்பேர்‌ பார்த்தார்‌. - வானோர்‌

- ஜி.எஸ்‌. வேதநாயகம்‌

Start Downloading Your Apps