தேவ ஜனமே பாடி துதிப்போம்

தேவ ஜனமே பாடி துதிப்போம்
தேவ தேவனை போற்றுவோம்
துதிகள் என்றும் ஏற்றியே
அவரைப் பணிந்திடுவோம்

1. சென்ற நாளில் கண்ணின் மணிபோல்
காத்த தேவனை துதித்திடுவோம் (2)
நீதி தயவு கிருபை நல்கும்
ஜீவ தேவனை துதித்திடுவோம் (2) - தேவ

2. வானம் பூமி ஆளும் தேவன்
வாக்கை என்றும் காத்திடுவார்
அவரின் உண்மை என்றும் நிலைக்கும்
மகிமை தேவனை துதித்திடுவோம்- தேவ

3. கர்த்தர் நாமம் ஓங்கிப் படர
தேவ மகிமை விளங்கிடவே
தேவ சுதராய் சேவை செய்து
தேவ ராஜனை வாழ்த்திடுவோம்- தேவ

4. தம்மை நோக்கி வேண்டும்போது
தாங்கி என்றுமே ஆதரிப்பார்
மறந்திடாமல் உறங்கிடாமல்
நினைத்த தேவனை துதித்திடுவோம் - தேவ

5. நமது போரை தாமே முடித்து
ஜெயமே என்றும் அளித்திடுவார்
சேனை அதிபன் நமது தேவன்
அவரை என்றும் போற்றிடுவோம்- தேவ

Start Downloading Your Apps