இயேசுவே உம்மையல்லாமல்

1. இயேசுவே, உம்மையல்லாமல்
நாங்கள் மா நிர்ப்பாக்கியர்;
எந்த நன்மையுமில்லாமல்
கெட்டுப்போன மானிடர்.

2. நாங்கள் பாவ இருளாலே
அந்தகாரப்பட்டவர்;
சர்ப்பத்தின் விஷத்தினாலே
தாங்கா நோய் பிடித்தவர்.

3. இந்தக் கெட்ட லோகம் எங்கும்
பாவக் கண்ணி மிகுதி;
தேவரீராலன்றி யாரும்
தப்பி வாழ்வதெப்படி?

4. இயேசுவே, பலத்தைத் தந்து
அந்தகாரம் அகற்றும்;
ஞானக் கண்ணைத் தெளிவித்து
எங்கள் மேல் பிரகாசியும்.

Start Downloading Your Apps