கர்த்தருக்கு காணிக்கை பக்தியாய்

கர்த்தருக்கு காணிக்கை பக்தியாய் கொண்டு வாரும்
அத்தன் கிறிஸ்து நம்மைஆசீர்வதிப்பார் நித்தம்

1, திருச்சபையோரே நீங்கள் தேவ சன்னிதி தனில்
வரும்போது வெறுங்கையாய் வரவொண்ணா தென்றுணர்ந்து

2. தசம்பாகங்களெல்லாம் சுவாமி பண்டசாலைக்கு
நிசமதாகவே கொடும் நன்மைமிகப் பெறுவீர்

3. சிறுக விதைக்கிறவன் சிறுகவே தானறுப்பான்
பெருக விதைக்கிறவன் பெருகவே தான்றுப்பான்

4 அவனவன் விசனமும் அலட்டுதலோடுமல்ல
அமலன் அன்பு கூரவே அகமகிழ்வோடு தானே

5. நெல் கம்பு கேப்பை சோளம் புல் காடைக்கண்ணி சாமை
வெல்லம் பருத்தி வற்றல் வெங்காயம் பயறுகள்

6 தேங்காய்கிழங்கு மல்லி தேன் நெய் காய்கனிகளும்
பாங்காய் நீ செய்து வரும் பல வேலைப் பொருள்களும்

7. துட்டு ரூபாய் நகைகள் பட்டு நெசவுப் பொருள்
முட்டை கோழி புறாக்கள் மாடு கிடாயாடுகள்

8. யாவிலும் மேலான தாய் தேவனுக்கேயுமது
ஆவி ஆத்துமா சரீரம் யாவும் படைத்தே இப்போ

9. மனுசர் உங்கள் நற்கிரியை மதித்து மகா தேவனை
மகிமைப்படுத்த உங்கள் வெளிச்சம் பிரகாசிக்க

Start Downloading Your Apps