கிறிஸ்துவின் சுவிசேஷகர்

1. கிறிஸ்துவின் சுவிசேஷகர்
நற்செய்தி கூறினார்
யாவருக்கும் திவ்விய ரகசியம்
விளங்கக் காட்டினார்.

2. பூர்வீக ஞானர் மங்கலாய்
அறிந்த வாக்கையே
கார்மேகம் இல்லாப் பகல்போல்
இவர்கள் கண்டாரே.

3. மெய் மாந்தனான கர்த்தரின்
மகா செய்கை எல்லாம்
உரைக்கும் திவ்விய வசனம்
சாகாமை உள்ளதாம்.

4. நால் சுவிசேஷகரையும்
ஓர் ஆவி ஏவினார்
தம் வேதத்தாலே நம்மையும்
ஒப்போதழைக்கிறார்.

5. நீர் பரிசுத்த மார்க்குவால்
புகன்ற செய்திக்கே
அடியார் உம்மை இத்தினம்
துதிப்போம், கர்த்தரே.

Start Downloading Your Apps