கர்த்தரை என்றுமே

1. கர்த்தரை என்றுமே
பின் செல்லும் சீஷன்,
எத்தோல்வி தீங்குமே
மேற்கொள்ளும் வீரன்,
எப்பயமின்றியே
தான் கொண்ட எண்ணமே
விடானே என்றுமே,
மோட்சம் செல்லுவோன்.

2. திகில் உண்டாக்குவார்
கோரக் கதையால்,
தாமே தத்தளிப்பார்
வீரன் ஊற்றத்தால்;
மாற்றாரை மடக்கி
ராட்சதர் அடக்கி
காட்டிடுவான் சக்தி
மோட்சம் செல்லுவோன்.

3. கர்த்தா, நீர் காத்திட
தூய ஆவியால்,
பெறுவேன் நித்திய
ஜீவன் முடிவில்;
வீண் எண்ணம் ஓடிடும்,
வீண் பயம் நீங்கிடும்,
முயற்சிப்பேன் என்றும்
மோட்சம் செல்லுவேன்.

Start Downloading Your Apps