கிருபை புரிந்தெனை ஆள்‌

கிருபை புரிந்தெனை ஆள்‌;-நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள்‌;-நிதம்‌

சரணங்கள்‌

1. திரு அருள்‌ நீடுமெய்ஞ்ஞான திரித்து,
வரில்நரனாகிய மா துவின்‌ வித்து! - கிருபை

2. பண்ணின பாவமெலாம்‌ அகல்வித்து,
நிண்ணயமாய்‌! மிகவுந்‌ தயைவைத்து, - கிருபை

3. தந்திரவான்‌ கடியின்‌ சிறைமீட்டு,
எந்தை, மகிழ்ந்துன்றன்‌ அன்புபாராட்டு. - கிருபை

4. தீமை உறும்‌ பல ஆசையை நீக்கிச்‌
சாமி! என்னை உமக்காலயம்‌ ஆக்கி. - கிருபை

5. தொல்வினையால்‌ வரும்‌ சாபம்‌ ஒழித்து,
நல்‌ வினையே செய்‌ திராணி அளித்து. - கிருபை

6. அம்பரமீதுறை வானவர்‌ போற்ற
கெம்பீரமாய்‌ விசுவாசிகள்‌ ஏத்த. - கிருபை

- மதரநாயகம்‌ உபதேசியார்‌

Start Downloading Your Apps