கோடானுகோடி சிறியோர்

1.கோடானுகோடி சிறியோர்
மேலோகில் நிற்கிறார்;
எப்பாவம் தோஷமின்றியும்
ஓயாமல் பாடுவார்-
விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!
இயேசுநாதா உமக்கே!

2.பேரின்ப வீட்டில் சுகமும்
மெய் வாழ்வும் நிறைவாய்
உண்டாக, சிறு பாலரும்
சேர்ந்தார் எவ்விதமாய்?
விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!
இயேசுநாதா உமக்கே.

3.மா பாவம் போக்கச் சிந்தினார்
மீட்பர் தம் ரத்தத்தை;
அப்பாலர் மூழ்கி அடைந்தார்
சுத்தாங்க ஸ்திதியை;
விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!
இயேசுநாதா உமக்கே.

4.ஏரோதின் வாளால் மடிந்து,
தம் பாலன் மீட்பர்க்காய்
ஆருயிரை நீத்ததாலே
உம் பாதம் சேர்ந்தோர்க்காய்
விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!
இயேசுநாதா உமக்கே.

5.பெத்தலைத் தூயபாலர் போல்
வியாதி ஆபத்தால்
சுத்த இளமையில் சென்றோர்
எண்ணற்ற பாலரால்,
விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!
இயேசுநாதா உமக்கே.

6.இப்பூமியில் நல்மீட்பரின்
பேரன்பை அறிந்தார்
விண் வீட்டில் அவர் அண்டையில்
நின்றாரவரிப்பார்-
விண்ணில் ஸ்தோத்ரம்! ஸ்தோத்ரம்!
இயேசுநாதா உமக்கே.

Start Downloading Your Apps