நித்தம், நித்தம் பரிசுத்தர்நித்தம், நித்தம் பரிசுத்தர் துத்தியம் செய்யும் தேவே- இவ்வாலயம்
நேயத்துடன் வரும் யாவர்க்கும் உன் அருள் தாவே
அனுபல்லவி
எத்திசையும் பணி கர்த்தாதி கர்த்தன் நம்
ஏசு கிறிஸ்துவின் நாமத்திற்கே துதி!
சத்ய சுவிசேஷம் எங்கும் பரம்ப
தயை அளித்தாளும் தயாபரனுக்கென்றும்
சர்வாதிகாரம் - மகிமையும் தகும் நமஸ்காரம் பெருகவும்
தத் தித் திமி தத் தித் திமி தனுத்த சேம்
தரி தாம் தரிகிட தளங்கு தோமென- நித்தம்
சரணங்கள்
1.அம்பரம் ஆசனம், பூமியை பாதத்தில் கண்டாய் - மிக
அஞ்சிப் பணிந்தோர் இருதயத்தும் குடி கொண்டாய்
இம்பர் பணிந்து நாம் ஏற்ற கிருபையைத் தந்தாய் - எங்கே
இரண்டொரு மூவர் இசைந்தாலும் வருவோம், என்றாய்;
இன்ப முழுக்க தாகும் ஞானஸ்நானம்
எல்ல உலகத்தார்க் கீயும் பிரதானம்;
அன்பர் அடையும் கருணை ராப்போஜனம்
ஆத்துமாவுக்கு நல் ஆறுதலாம் தினம்;
ஆ! உபகாரம் பராபரன் அளித்தார் இந்நேரம் எங்கட்கொத்த
ஆபத்திலும் சாபத்திலும் அருமையாய், தேவ
கோபத்திலும் யாவற்றிலும் கிருபையாகவே- நித்தம்
2.எத்தலத்தோர்க்கும் உன் உத்தமவார்த்தையைக் கூறும் சுவி
சேஷ குருமாரக்குக் கிருபை பெலன் தாரும்
சுத்த நற்போதகத்தில் பயிலும் நற்சபையாரும் - மெய்ச்
சுடர் வழி கண்டு நடக்கக் கருணைக் கண் பாரும்;
பக்தி, விசுவாசம், நம்பிக்கை எங்களில்
பாலித்தருளும் எக் காலும்; நிலை நிற்க
முக்தி பெறும் கடை நாள் வரை ஆவி
முத்திரையாக நிதம் புரிந்தாளும்;
மூவர் ஒன்றாய் வந் திவ் வீட்டில் மேவும்: அன்பாய் நின் - நல்வார்த்தை
முற்பட்ட மகத்துவத் தயையால் உளங்கொள
முற்பொற் சிறை நற்பிற் சிறையே வணங்கியே -நித்தம்