சிலுவை மரத்திலே

1. சிலுவை மரத்திலே
இயேசுவை நான் நோக்கவே
என்னைப் பார்த்தழைக்கிறார்,
காயம் காட்டிச் சொல்கின்றார்;
மீட்பின் செய்கை ஆயிற்றே,
வாழ வாவேன், பாவியே.

2. "பாவ பலியான தால்
குத்தப்பட்டேன் ஈட்டியால்;
ரத்தம் பூசப்பட்டு நீ
எனக்குன்னை ஒப்புவி;
மீட்பின் செய்கை ஆயிற்றே
வாழ வாவேன், பாவியே"

3. "பான போஜனம் நானே,
விருந்துண்டு வாழ்வாயே;
பிதாவண்டை சேரலாம்,
நேச பிள்ளை ஆகலாம்;
மீட்பின் செய்கை ஆயிற்றே,
வாழ வாவேன், பாவியே.

4. "சீக்கிரத்தில் வருவேன்,
உன்னைச் சேர்ந்து வாழ்விப்பேன்
நித்தியானந்தம் மோட்சத்தில்
உண்டு, வா என்னண்டையில்;
மீட்பின் செய்கை ஆயிற்றே,
வாழ வாவேன், பாவியே."

Start Downloading Your Apps