நீ குருசில் மாண்ட கிறிஸ்துவை

1.நீ குருசில் மாண்ட கிறிஸ்துவை
அறிக்கைபண்ணவும்
அஞ்சாவண்ணம் உன் நெற்றிமேல்
சிலுவை வரைந்தோம்.

2. கிறிஸ்துவின் மாண்பைக் கூறவே
வெட்காதபடிக்கும்,
அவரின் நிந்தைக் குறிப்பை
உன்பேரில் தீட்டினோம்.

3. நீ கிறிஸ்துவின் செங்கொடிக்கீழ்
துணிந்து நிற்கவும்,
சாமட்டும் நற்போராட்டத்தை
நடத்தும்படிக்கும்.

4. நீ கிறிஸ்துசென்ற பாதையில்
நேராகச் செல்லவும்
நிந்தை எண்ணாமல், சிலுவை
சகித்தீடேறவும்.

5. கிறிஸ்துவின் அடையாளத்தை
சபை முன்னே பெற்றாய்;
நீ அவர் குருசைச் சுமந்தால்
பொற்கிரீடம் பூணுவாய்.

Start Downloading Your Apps