நன்றி செலுத்துவாயே என்‌

நன்றி செலுத்துவாயே-என்‌ மனமே நீ
நன்றி செலுத்துவாயே.

சரணங்கள்‌

1. அன்றதம்‌ செய்தபாவம்‌ பொன்று நிமித்தமாக
இன்றவதாரம்செய்த இயேசுவுக்கே - நன்றி

2. தேவசேயனும்‌ தன்‌ சேணுலகத்தை விட்டு
ஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே - நன்றி

3. அதிசயமானவர்‌ ஆலோசனைக்‌ கர்த்தர்‌
துதிபெறப்‌ பாத்திரராம்‌ சுதனவர்க்கே. - நன்றி

4. வல்லமையுள்ளதேவன்‌ வானநித்தியபிதா
சொல்லரும்‌ பரப்பொருளாம்‌ சுதனவர்க்கே. - நன்றி

5. உன்னதத்தேவனார்‌ தமக்கே மகிமையுடன்‌
இந்நிலம்‌ சமாதானம்‌ என்றுமுண்டாக. - நன்றி

6. ஆண்டவர்‌ தாசரை அன்பின்‌ பெருக்கத்தால்‌
ஆசீர்வதிப்பதாலே அருமையாக. - நன்றி

- அருள்திரு. ஆ. தேவதாசன்‌

Start Downloading Your Apps