ஜீவாதிபதி ஜோதியே

1. ஜீவாதிபதி, ஜோதியே,
பக்தரின் இன்ப இயேசுவே,
லோகின் மா இன்பம் ருசித்தும்
சேர்ந்தோம் உம்பாதமே மீண்டும்.

2. பாதம் சேர்ந்தோரை மீட்பீரே
இவ்வுண்மை என்றும் மாறாதே;
தேடுவோர்க்கு நீர் நல்லவர்;
பற்றுவோர்க்குச் சம்பூரணர்.

3. விண் அப்பம் உம்மில் ருசிப்போம்,
முற்றும் உட்கொள்ள ஆசிப்போம்;
நீர் ஜீவ ஊற்று உம்மிலே
உள்ளத்தின் தாகம் தீருமே.

4. மாறிடும் வாழ்க்கை யாவிலும்
எம் ஆத்மா உம்மை வாஞ்சிக்கும்;
உம் அருட் பார்வை இன்பமே,
விஸ்வாசிப்போர்க்குப் பாக்கியமே.

5. தங்கும் எம்மோடு, இயேசுவே,
எக்காலும் ஆற்றித் தேற்றுமே;
காரிருள் பாவம் ஓட்டுமே,
உம் தூய ஜோதி வீசுமே.

Start Downloading Your Apps