உன் தேவனைச் சந்திக்க

உன் தேவனைச் சந்திக்க நீ ஆயத்தமா?

1. பூவில் இயேசு வரும்போது பொல்லாரோடிடுவார்
இந்த விதம் நீ இருந்தால் என்ன செய்திடுவாய்? - உன்

2. மேகங்களுடன் வருவேனென்று சொன்னவர்
இப்போ மேகந்தனில் வரும்நேரம் கிட்டிச் சேருதே- உன்

3. தேவ தூதரோடும் பெரும் எக்காளத்தோடும்
தம் பக்தரைச் சந்திக்கும் நேரம் கிட்டிச் சேருதே- உன்

4. அவபக்தர் அக்காலத்தில் அழுதிடுவார்
அவர் வரும்போது இரட்சிப்படைய மாட்டார்- உன்

5. பாவங்களில் ஜீவிப்பார் பதுங்கிடுவார்
பரிசுத்த மாக்கப்பட்டோர் பறந்திடுவார் - உன்

6. இரக்கமுள்ள இந்த நாளில் மனந்திரும்பு
இந் நிமிஷம் ஏற்றுக்கொள்ளும் மன்னிப்புப்பெற - உன்

7. உனக்காய் மரித்த இயேசு காத்து நிற்கிறார்
இயேசு உன்னைப் பட்சமாக ஏற்றுக்கொள்வார் - உன்

8. பரனை ஏற்றுக் கொள்ளாதோர் அந்த நாளிலே
பதுங்கி நித்தியமாகப் பரிதவிப்பார்- உன்

Start Downloading Your Apps