எடுத்துச்செல்வீர் இந்த

எடுத்துச்செல்வீர் இந்த சுவிசேஷத்தை
எடுத்துச்செல்வீர் இந்த சுவிசேஷத்தை
அடுக்கடுக்காக இடங்கள் உண்டு
எடுத்துச்செல்வீர் இந்த சுவிசேஷத்தை

1. பல கோடி மக்கள் பசியால் வாட
தனித்து உண்ணும் யாரும் கிறிஸ்தவரா
நான்குபேர் அவர்கள் குஷ்டரோகம்
கொடுத்து உண்டார் அவர் உள்ளம் தங்கம்

2. இந்நிலை பார்த்தும் தாமதித்தால்
இரட்சிப்பு பிரிதொரு வழி எழும்பும்
உன் நிலை அன்று என்னவாகும்?
தயக்கத்தின் முடிவு அழிவே ஆகும்

3. இயேசுவின் அடிமை ஆகுகின்றேன்
கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்பேன்
என்னை அனுப்பும் நான் சொல்லுவேன்
உமது கோல் தடி என்னை வழி நடத்தும்

Start Downloading Your Apps