அல்லேலூயா துதி அல்லேலூயா

அல்லேலூயா துதி, அல்லேலுயா ஜெயம்‌,
வல்லத்‌ திரியேகமகத்வ தேவற்கென்றும்‌.

சொல்லரும்‌ சுத்த சுவிசேடந்தந்தவர்‌
தூயன்‌ சகாயனுபாயானாம்‌ நேயற்கு. - அல்லே

சரணங்கள்‌

1. வானம்‌ புவியும்படைத்த பிதாவுக்கும்‌
மைந்தரை மீட்ட சுதனென்ற தேவற்கும்‌
ஞானவிசேடம்‌ வெளியிட்ட ஆவிக்கும்‌
நம்மாலிந்நாளு மெந்நாளும்‌ நற்றோத்திரம்‌ - அல்லே

2. வேதோபதேச அப்போஸ்தலன்மார்களை
மேதினியெங்கும்‌ அனுப்பித்திருமறை
தீதறப்போதகஞ்‌ செய்யவழி செய்த
சிங்காரக்கர்த்தர்க்கு மங்காமகத்வர்க்கு. - அல்லே

3. வாதைகள்‌ மெத்த வதைத்துந்‌ திருச்சபை
வாடாது மிக்க செழிப்பாய்‌ வளர்ந்திட,
ஏதுங்குறைவறவே செய்த தேவனை
ஏற்றித்துதிசெய்வம்‌, போற்றிப்‌ புகழ்செய்வம்‌ - அல்லே

4. ஆகாதபேயின்‌ அகோரத்தினாற்‌ சபை
யானதுள்வந்து புகுந்த பிழைகளை
வாகாக நீக்கவழி செய்த கர்த்தனை
வந்தனை செய்வோம்‌ நாம்‌ சிந்தனையாகவே - அல்லே

5. வானாதி சேனைமகிழ்ந்‌ திசைகள்பாட
மக்கட்குழாமும்‌ களிப்புடனேசேர
ஈனப்பிசாசின்‌ இடர்களெல்லாந்தீர,
ஏகன்தயைசெய்தார்‌, வாகாய்‌ அருள்பெய்தார்‌. - அல்லே

- அருள்திரு. ஞா. சாமுவேல்‌

Start Downloading Your Apps