பெத்தலையில்‌ பிறந்தவரைப்

பெத்தலையில்‌ பிறந்தவரைப்‌
போற்றித்துதி, மனமே-இன்னும்‌

சரணங்கள்‌

1. சருவத்தையும்‌ படைத்தாண்ட சருவவல்லவர்‌-இங்கு
தாழ்மையுள்ள தாய்மடியில்‌ தலைசாய்க்கலானார்‌. - பெத்‌

2. சிங்காசனம்‌ வீற்றிருக்கும்‌ தேவமைந்தனார்‌-இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில்‌ படுத்திருக்கிறார்‌. - பெத்‌

3. முன்னம்‌ அவர்‌ சொன்னபடி முடிப்பதற்காக-இங்கு
மோட்சம்‌ விட்டுத்‌ தாழ்ச்சியுள்ள முன்னணையிலே. - பெத்‌

4. ஆவிகளின்‌ போற்றுதலால்‌ ஆனந்தங்கொண்டோர்‌-இங்கு
ஆக்களுட சத்தத்துக்குள்‌ அழுது பிறந்தார்‌. - பெத்‌

5. இந்தடைவாய்‌ அன்புவைத்த எம்பெருமானை-நாம்‌
எண்ணமுடன்‌ போய்த்துதிக்க ஏகிடுவோமே. - பெத்‌

- யோ. பால்மர்‌

Start Downloading Your Apps