யேசு நேசிக்கிறார் யேசு நேசிக்கிறார்

யேசு நேசிக்கிறார் - யேசு நேசிக்கிறார்
யேசு என்னையும் நேசிக்க யான் செய்த
தென் மா தவமோ!

சரணங்கள்

1.நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார்,
மாசில்லாத பரன் சுதன்றன் முழு
மனதால் நேசிக்கிறார்-யேசு

2.பரமதந்தை தந்த பரிசுத்த வேதம்
நாராமீனரை நேசிக்கிறாரெனல்
நவிலல் ஆச்சரியம் - யேசு

3 நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும்,
நீதன், யேசெனை நேசிக்கிறாரெனல்
நித்தம் ஆச்சரியம் -யேசு

4 ஆசை யேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்
அதை நினைத்தவர் அன்பின் கரத்துளே
ஆவலாய்ப் பறப்பேன் -யேசு

5.ராசன் யேசுவின் மேல் இன்ப கீதஞ் சொலில்.
ஈசன் யேசெனைத் தானேசித்தாரென்ற
இணையில் கீதஞ்சொல்வேன் -யேசு

Start Downloading Your Apps