வாஞ்சைப்பட்ட இயேசுவே அல்லேலூயா

1. வாஞ்சைப்பட்ட இயேசுவே, அல்லேலூயா!
இந்தப் பூதலத்திலே அல்லேலூயா!
கொஞ்ச நாள்தான் தங்கினீர்; அல்லேலூயா!
பின்பு மோட்சம் ஏகினீர், அல்லேலூயா!

2. வான ஆசனத்திலே அல்லேலூயா!
வீற்றிருந்து நித்தமே அல்லேலூயா!
துதி பெறும் தேவரீர் அல்லேலூயா!
பூதலத்தை மறவீர், அல்லேலூயா!

3. திருக்கரம் குவித்து, அல்லேலூயா!
திருக்காயம் காண்பித்து, அல்லேலூயா!
திருவாய் மலர்ந்து நீர் அல்லேலூயா!
மாந்தர்க்காய் மன்றாடுவீர், அல்லுலூயா!

4. மண்ணைவிட்டுப் பிரிந்தும், அல்லேலூயா!
வான லோகம் போயினும், அல்லேலூயா!
எங்கள் ஜெபம் கேளுமே, அல்லேலூயா!
எங்கள் நெஞ்சில் தங்குமே அல்லேலூயா!

Start Downloading Your Apps