அன்பிதோ அன்பிதோ அன்பிதோ

அன்பிதோ! அன்பிதோ! அன்பிதோ! என்னை
அழைத்தீரரசே அருளாலே

சரணங்கள்

1. நாறிக்கிடந்த என் நாற்றத்தை நீக்கியதும் கிருபை
நாசணுமாகாமல் பாதுகாத்தணைத்து
மந்தையில் சேர்த்துக் கொண்டீரே- அன்பிதோ

2. சுத்த ஜலத்தினால் சுத்திகரித்தீர் என்னை தமக்காய்
மீறிப்போகும் எந்தன் சிந்தை அகற்றி தம்
சித்தத்தைச் செய்யச் செய்தீரே - அன்பிதோ

3. ஆவியீந்து எந்தன் காயம் தம் பரிசுத்தாலயமாம்
ஆதி தேவன் என்னைச் சொந்தமாக்கிக் கொண்டார்
என்னை பேரின்பமெனக்கே - அன்பிதோ

4. தூய ஜீவியம் இப்பூலோகத்தில் யானும் நடத்த
தூய கீதமுடன் துயருடன் பாட
ஏழைக்கும் கிருபை செய்தீரே!- அன்பிதோ

5. உம்மைச் சந்தித்திட தூய உம் சாயலெனக்கருளும்
உன்னதங்களிலே என்றும் உம்மோடொன்றாய்
தங்கிடத் தயவருளும்- அன்பிதோ

Start Downloading Your Apps