வாடும் உள்ளங்களே

வாடும் உள்ளங்களே
வாரீர் இறைவனிடம்
தேடும் உள்ள அமைதி
தேவன் தந்திடுவார்

1. வருந்தி சுமை சுமந்து
வாழ்வில் பெலன் இழந்து
தேடும் உள்ள அமைதி
தேவன் தந்திடுவார்

2. உலக இன்பமதில்
உழன்று அலைந்திடாதே
குருசை சுமந்து சென்ற
குருவைப் பின் தொடர்வோம்

3. இன்பம் என்றென்றுமே
இயேசுவின் அன்பினாலே
நாடிச் சென்றிடுவோம்
மோட்சம் அடைந்திடுவோம்

Start Downloading Your Apps