வேதமே என்ன சொல்லுவேன்

வேதமே, என்ன சொல்லுவேன்‌?-நின்‌ மாட்சியை.

சேத மிலாது நன்னாதர்‌ தம்‌ அருள்‌ திருப்‌
பாதமுறும்‌ நெறி யோது மொரே சத்ய. - வேத

சரணங்கள்‌

1. கண்முன்‌ நீ எழுந்தானால்‌ கரையிலா ஞானம்‌;
காந்தி நற்பனி மழை கசிந்திடும்‌ வானம்‌;
புண்‌ மனமுடை யோர்க்குப்‌ புகழருந்‌ தானம்‌;
புசித்திடக்‌ கசித்திட ருசித்திடும்‌ பானம்‌. - வேத

2. சிறியவர்‌ பெரியவர்‌ செல்வர்கள்‌ வலியார்‌
தீரர்கள்‌ வீரர்கள்‌ சீரியர்‌ எளியார்‌
அறிஞர்கள்‌ அல்லவர்‌ ஆடவர்‌ மெலியார்‌
அனைவரும்‌ அருந்திட அருந்திடச்‌ சலியார்‌. - வேத

3. கனபல மருளுவாய்‌, தினந்தினங்‌ காலை
களைப்பினைப்‌ போக்குவாய்‌, களைப்புறு மாலை
தினமென திதயமே திருத்தலுன்‌ வேலை,
செப்பருங்‌ கனிதருங்‌ கற்பகச்‌ சோலை. - வேத

4. அகமுறு மானைகள்‌' விழுந்து தள்ளாடும்‌;
அருள்நதி ஆடுகள்‌ நடந்துனி லோடும்‌;
தகவுனின்‌ கரைகளில்‌ குருவிகள்‌ கூடும்‌;
தருக்கள்‌ செழித்திருக்கும்‌ தாசர்கள்‌ நாடும்‌. - வேத

5. பொன்‌ அபரஞ்சியிலும்‌ உன்‌ விலை பெரிதே!
பூவுலகினிலுனக்‌ குவமைக எரிதே;
நின்னை யசட்டை செய்வோர்‌ நிலைமிக வறிதே!
நின்படிப்‌ பறியாதோர்‌ கல்விமா சிறிதே! - வேத

6. இருபுறங்‌ கருக்குவாள்‌ தனிலும்‌ நீ கூரே!
இகபரம்‌ ரண்டிற்கும்‌ உன்வழி நேரே!
கிருபை எத்தனமுனக்‌ கேற்ற நற்பேரே!
கிறிஸ்துவின்‌ அருள்தனை எனக்கு நீ வாரே! - வேத

- அருள்திறா. ஞா. சாமுவேல்‌

Start Downloading Your Apps