பூமி மீது ஊர்கள் தம்மில்

1. பூமி மீது ஊர்கள் தம்மில்
பெத்லெகேமே, சீர் பெற்றாய்,
உன்னில் நின்று விண்ணின் நாதர்
ஆள வந்தார் ராஜனாய்.

2. கர்த்தன் மனுடாவதாரம்
ஆன செய்தி பூமிக்கு
தெரிவித்த விண் நட்சத்திரம்
வெய்யோனிலும் அழகு.

3. சாஸ்திரிமார் புல் முன்னணையில்
காணிக்கை படைக்கிறார்
வெள்ளைப் போளம், தூபவர்க்கம்,
பொன்னும் சமர்ப்பிக்கப்பார்;

4. தூபவர்க்கம் தெய்வம் காட்டும்,
பொன் நம் ராஜன் பகரும்
வெள்ளைப் போளம் அவர் சாவைத்
தெரிவிக்கும் ரகசியம்.

5. புறஜாதியாரும் உம்மை
பணிந்தார்; அவ்வண்ணமே
இன்று உம் பிரசன்னம் நாங்கள்
ஆசரிப்போம், இயேசுவே.

Start Downloading Your Apps