என் கர்த்தாவே உம்மில் தான்

என் கர்த்தாவே, உம்மில் தான்
முழு நெஞ்சத்தாலே நான்
வாஞ்சை கொண்டு, நித்தமும்
லோக வாழ்வை அற்பமும்
குப்பையும் என்றெண்ணுவேன்,
உம்மையே சிநேகிப்பேன்.

2. லோகத்தாரின் களிப்பு
துக்கங்கொண்ட நெஞ்சுக்கு
சஞ்சலத்தையன்றியே,
தேற்றத்தை உண்டாக்காதே;
உம்மையே சிநேகிப்பேன்,
அதால் பாக்கியம் அடைவேன்.

3. தேவரீரில் வாழ்வெல்லாம்
பூர்த்தியாகவே உண்டாம்;
உம்மில் வாஞ்சை கொள்வோனாய்
உண்மையான நேசனாய்
சேர்வோனுக்குத் தேவரீர்
அந்த வாழ்வைக் கொடுப்பீர்.

4. ஆறுதலும் பூரிப்பும்,
ஜீவனும் மகிழ்ச்சியும்
உம்மால் தா என்றைக்கும்
குறைவின்றிக் கிடைக்கும்;
நீரே அன்பின் காரணர்;
கருணைத் தயாபரர்.

Start Downloading Your Apps