அருள் நிறைந்தவர்

1. அருள் நிறைந்தவர்,
பூரண ரட்சகர்
தேவரீரே;
ஜெபத்தைக் கேட்கவும்
பாவத்தை நீக்கவும்
பரத்தில் சேர்க்கவும்
வல்லவரே.

2. சோரும் என் நெஞ்சுக்கு
பேரருள் பொழிந்து
பெலன் கொடும்,
ஆ! எனக்காகவே
மரித்தீர், இயேசுவே;
என் அன்பின் ஸ்வாலையே
ஓங்கச் செய்யும்.

3. பூமியில் துக்கமும்
சஞ்சலம் கஸ்தியும்
வருகினும்,
இரவில் ஒளியும்
சலிப்பில் களிப்பும்
துன்பத்தில் இன்பமும்
அளித்திடும்.

4. மரிக்கும் காலத்தில்
கலக்கம் நேரிடில்,
சகாயரே,
என்னைக் கைதூக்கவும்
ஆறுதல் செய்யவும்
மோட்சத்தில் சேர்க்கவும்
வருவீரே.

Start Downloading Your Apps