கலங்காதே உன்னோடு நானிருப்பேன்

1. கலங்காதே உன்னோடு நானிருப்பேன்
கைவிடவே மாட்டேன்.
ஜீவனுள்ள நாள்மட்டும்
உன்னோடு நானிருப்பேன்
ஆதரவின்றி நீயும்
அழுது நிற்கும்போது
அந்நேரம் உன்னோடு நானிருப்பேன்
கைவிடவே மாட்டேன்.

விலகவே மாட்டேன்
கைவிடவே மாட்டேன்
ஜீவனுள்ள நாள் மட்டும்
உன்னோடு நானிருப்பேன்.

2. பாவச் சேற்றினில்
பாதம் மூழ்கும்போது
மனது சஞ்சலத்தால்
மருகி நிற்கும்போது
கண்ணீரைத் தண்ணீராக
நீயும் பருகும்போது
அந்நேரம் உன்னோடு நானிருப்பேன்
கைவிடவே மாட்டேன். - விலகவே

3. வாழ்வில் நம்பிக்கை
வதங்கிப் போனதோ
பாவப் பழக்கத்தில்
திரும்ப விழுந்தாயோ
தாங்க ஆளில்லையென்று
தேம்பி நிற்கும்போது
அந்நேரம் உன்னோடு நானிருப்பேன்
கைவிடவே மாட்டேன். - விலகவே

Start Downloading Your Apps