மா மனோகரா இவ்வாலயம்

மாமனோகரா! இவ்வாலயம் வந்தருள் கூரும்
மாமனோகரா! பராபரா!

சரணங்கள்

1.பூமியாளும் நாதனே, நரர்!
போகம் நாடும் நீதனே!
நாமேவாழ்த்தும் தாசர் நடுவில்
தாமதம் இல்லாமல் எழுந்தருள்!

2 நாதனே, இவ்வாலயத்தை
நலமாய்த் தந்நாய் தாசர்க்கே;
பாதம் போற்றி வாழ்த்துவோம் குரு
பரனே, பராபரா தினம்

3 நின் திருத்தயை பொறுமை
நின் திரு மகிமையும்
சந்தமாய் நிறைந்திட இதில்
சந்ததம் ஈவாய் நின் ஆசிடை

4.தோத்திரம் ஜெபம் தியானம்
தூய்மையாயம் பிரசங்கமும்
பார்த்திபா இவ்வாலயத்தில்
பக்தியாகவே நடந்திட

5.நீதி ஞாயம் தெய்வபக்தி
நேர்மைவேதத் தியானமும்
நாதனில் விஸ்வா சமும் மிஞ்சி
நன்கு போற்ற தாசர்க்கருள் புரி

Start Downloading Your Apps