மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம்

மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்.
வல்லவர் அன்பர் பாடிப் பொற்றுவோம்;
நம் கேடகம் காவல் அனாதியானோர்,
மகிமையில் வீற்றுத் துதி அணிந்தோர்.

2. சர்வ வல்லமை தயை போற்றுவோம் .
ஒளி தரித்தோர், வானம் சூழ்ந்தோராம்:
குமுறும் மின் மேகம் கொபரதமே.
கொடும் கொண்டல் காற்றிருள் சூழ் பாதையே

3. மா நீச மண்னோர் நாணல் போன்றோர் நாம்:
என்றும் கைவியடீர் உம்மை நம்புவோம்:
ஆ! உருக்க தயை! முற்றும் நிற்குமே.
மட்பர், நண்பர், காவலர், சிருஷ்டிகரே.

4. ஆ! சர்வ சக்தி! சொல்லொண்ணா அன்பே!
மகிழ்வாய்‌ விண்ணில்‌ தூதர்‌ போற்றவே,
போற்றிடுவோம்‌ தாழ்ந்தோர்‌ நாம்‌ அற்பர்‌ என்றும்‌
மெய்‌ வணக்கமாய்‌ துதி பாடலோடும்‌.

Start Downloading Your Apps