யேசு நாமம்‌ ஒன்றை நம்புவீர்

யேசு நாமம்‌ ஒன்றை நம்புவீர்‌,
பூலோகத்தாரே.

சரணங்கள்‌

1. யேசு நாமம்‌ ஒன்றை நம்பும்‌;
ரட்சண்யத்துக்‌ கிதுவே ஸ்தம்பம்‌;
பேசும்‌ வேறே நாமமெல்லாம்‌
பேருலகை ரட்சிக்காதே, - யேசு

2. பார்த்திபன்‌ தவீது குல
கோத்திரக்‌ கன்னிமரிபால்‌,
நேத்திரம்‌ போலே உதித்து
நேமியின்‌ ரட்சகனான, - யேசு

8. பூதலத்‌ தஞ்ஞான இருள்‌
போக்கவே மெஞ்ஞான பெருஞ்‌
ஜோதியாய்‌ விளங்கும்‌ நீதிச்‌
சூரிய னான மகத்வ - யேசு

4. பாவிகளீடேற மோட்ச
பாக்கியம்‌ பெறுவதற்காய்‌
ஜீவன்‌ விட்டுயிர்த்தெழுந்த
சேணுலகுக்‌ கேறிச்‌ சென்ற, - யேசு

5. விண்டலத்தவர்கள்‌ சூழ,
வெருண்டலகை பதறி வீழ;
மண்டலத்தைத்‌ தீர்வை செய்ய
மாமுகில்‌ மீதேறி வரும்‌, - யேசு

- ஈசாக்கு பாக்கியநாதன்‌

Start Downloading Your Apps