ஆர்‌ இவர்‌ ஆராரோ இந்த

ஆர்‌ இவர்‌ ஆராரோ-இந்த-அவனியோர்‌ மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய்‌ உதித்த இவ்வற்புதப்‌ பாலகனார்‌?

சரணங்கள்‌

1. பாருருவாகுமுன்னே-இருந்த-பரப்‌ பொருள்‌ தானிவரோ?
சீருடன்‌ புவி, வான்‌, அவை பொருள்‌ யாவையுஞ்‌ சிருட்டித்த
மாவலரோ? - ஆர்‌

2. மேசியா இவர்தானோ?-நம்மை-மேய்த்திடும்‌ நரர்கோனோ?
ஆசையாய்‌ மனிதருக்காய்‌ மரித்திடும்‌ அதி அன்புள்ள
மனசானோ? - ஆர்‌

3. தித்திக்குந்‌ தீங்கனியோ?-நமது-தேவனின்‌ கண்மணியோ?
மெத்தவே உலகிருள்‌ நீக்கிடும்‌ அதிசயமேவிய
விண்ணொளியோ? - ஆர்‌

4. பட்டத்துத்‌ துரைமகனோ?-நம்மைப்‌-பண்புடன்‌ ஆள்பவனோ?
கட்டளை மீறிடும்‌ யாவர்க்கும்‌ மன்னிப்புக்‌ காட்டிடுந்‌
தாயகனோ? - ஆர்‌

5. ஜீவனின்‌ அப்பமோதான்‌?-தாகம்‌-தீர்த்திடும்‌ பானமோதான்‌?
ஆவலாய்‌ ஏழைகள்‌ அடைந்திடும்‌ அடைக்கல மானவர்‌ இவர்‌
தானோ? - ஆர்‌

Start Downloading Your Apps