துதிதுதி பரன்றனையே சுகிர்த

துதிதுதி பரன்றனையே-சுகிர்தமாக.

சரணங்கள்‌

1. துதிதுதி பரனையே துல்லிய நிர்மலனையே,
கதிதரு கரனையே கர்த்தாதி கர்த்தனையே. - துதி

2. இருளின்‌ ராஜாங்கம்வென்று இரவி யாரணங்‌ கொண்டு,
மருள்வீண்பத்தியினின்று வல்லன்‌ ஜெயித்தாரென்று. - துதி

3, சுவிசேட எக்காளம்‌ தொனித்தவுடன்‌ வேதாளம்‌
பவிசை யிழந்தகோலம்‌ பார்‌ இந்த நற்காலம்‌. - துதி

4. இத்தனை யாண்டாக இயேசுவை நன்றாகப்‌
பக்தர்கள்‌ பணிவாகப்‌ பருவாய்ப்‌ போதித்தற்காக. - துதி

5. நேயன்‌ யேசுவைத்தேடி நிதமவர்‌ பதம்‌ நாடித்‌
தூயன்றனைக்‌ கொண்டாடிச்‌ சுபகீதங்களைப்‌ பாடித்‌. - துதி

- அருள்திரு. ஞா. சாமுவேல்‌

Start Downloading Your Apps