அரசனைக் காணமலிருப்போமோஅரசனைக் காணமலிருப்போமோ?-நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ? - அரசனை
பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ?-யூதர்
பாடனு பவங்களை ஓழிப்போமோ?-யூத - அரசனைக்
சரணங்கள்
1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே,-இஸ்ரேல்
ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே(1),
ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே!-யூத - அரசனைக்
2. தேசோ மயத் தாரகை(2) தோன்றுது பார்!-மேற்குத்
திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!
பூசனைக்(3) காண நன்கொடைகள் கொண்டே-அவர்
பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே!-யூத - அரசனைக்
3, அலங்காரமனை யொன்று தோணுது பார்!-அதன்
அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!
இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்!-நாம்
எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்!-யூத - அரசனைக்
4. அரமனையில் அவரைக் காணோமே!-அதை
அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே!
மறைந்த உடு(4) அதோ! பார் திரும்பினதே,-பெத்லேம்
வாசலில் நமைக்கொண்டு சேர்க்குது பார்!-யூத - அரசனைக்
5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே,-ராயர்
பொற்கழல் அர்ச்சனை புரிவோமே!
வன்கண்ணன் ஏரோதைப் பாராமல்,-“தேவ
வாக்கினால் திரும்பினோம் சோராமல்,-யூத - அரசனை
- அருள்திரு. ஜி.சே. வேதநாயகம்
1 மிகுதல் 3 இறைவன்
2 நட்சத்திரம் 4 நட்சத்திரம்